நாளை 108 உலகசித்தர்கள் பங்கேற்கும் ருத்ரவேள்வி ஆரம்பம் சிவபெருமான் தலைமையில் அன்னைசித்தர் ராஜ்குமார் ஆசியுடன் களுதாவளை களைகட்டுகிறது 1லட்சம் மூலிகை 1லட்சம் வில்வ விருட்சதானம்..
இந்திய பிரம்மரிஷிமலை காகமுனி அன்னைசித்தர் ராஜ்குமார் சுவாமிகளின் நல்லாசியுடனும் உலகைஆளும் 210மஹா சித்தர்களின் பரிபூரண கடாட்சத்துடனும் நாளை 19ஆம் திகதி மட். களுதாவளையில் ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வி ஆரம்பமாகின்றது.
இதற்கென அன்னைசித்தர் இந்தியாவிலிருந்து நேற்றுமுன்தினம் இலங்கை வந்துள்ளார்.1லட்சம் வகையான சஞ்சீவினி மூலிகைகளைக் கொண்டு நடாதத்ப்படவிருக்கும் இந்த மாபெரும் யாகத்தில் 100கோடி பஞ்சாட்சர ஜெபம் ஓதப்படவுள்ளது. யாகத்தில் கலந்துகொள்ளும் அனைத்து அடியாhர்களுக்கும் யாகவேள்வியில் பூஜிக்கப்பட்ட ருத்ராட்சமும் யாக பிரசாதமும் வழங்கப்படும்
இந்த மகாவேள்வியைமுன்னிட்டு. இலங்கை முழுவதும் 1லட்சம் சிவசின்னமான வில்வமரங்கள் நடப்படவுள்ளது.
20ஆம் திகதி இரவு இரவு8மணிக்கு ஞானி பிருந்தாவனரின் சிறப்புச்தசங்கம் இடம்பெறும்.21ஆம் திகதி புதன்கிழமை இரவு 8மணிக்கு தென்னிந்திய பிரபல கர்நாடக இசைப்பாடகி கானவினோதினி கலைமாமணி டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவனின் சிறப்பு இசைக்கச்சேரி நடைபெறும்.
காகமுனி அன்னைச்சித்தர் திருவாக்கின்படி உலகெங்கிலும் வாழும் உலக சிவனடியார்கள் கூட்டமைப்பும்சித்தர்களின் குரல் மகா சித்தர்கள் டிரஸ்ட் அன்பர்களும்இராவண சேனை அமைப்பினரும் களுதாவளை சுயம்பு லிங்க பிள்ளையார் ஆலயத்தினர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த வேள்வியானது 19.11.2018 தெடக்கம் 22.11.2018 வரை களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
இவ் வேள்வியானது உலக நன்மைக்காகவும் ஈழவள நாட்டின் சுபீட்சத்திற்காகவும் நாட்டில் ஏற்பட்ட அகால மரணங்களினால் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் அவைகளினால் நாட்டில் ஏற்பட்ட தோச நிவர்த்திக்காகவும் வருங்காலத்தில் ஏற்படவுள்ள இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும் அனைத்து நோய்நொடிகளில் இருந்து மக்கள் விடபடவும் வருங்காலங்களிலும் இந்த மண்ணை தாக்கா வண்ணம் இருக்கவும் இலங்கை திருநாடு மீண்டும் சிவ பூமியாகவும் திகழவும் உலகின் தலை சிறந்த 108 தேவ பண்டிதர்கள் சிவனடியார்கள் சித்த குருமார்களைக் கொண்டு மாபெரும் ருத்திர வேள்வியானது கிழக்கிலங்கையின் புராதன பிரசித்தி வாய்ந்த களுதாவளை சுயும்பு லங்க பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.