காரைதீவில் இப்படியொரு வீதியா ! தேசிகர்வீதியின் அவலம்..!
காரைதீவின் மத்தியை ஊடறுத்துச்செல்லும் பிரதான நீண்டவீதியான தேசிகர் வீதி பலவருடகாலமாக புனரமைக்கப்படாமையினால் படுமோசமாக காணப்படுகின்றது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மழைகாலத்தில் சிறுசிறு குளமாக காட்சியளிக்கும். சில இடங்களில் பொதுமக்கள் செங்கல் துண்டுகளைப்போட்டுள்ளனர்.
போக்குவரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் காரைதீவில் ஒரு பிரதானவீதி காணப்படுகின்றதென்றால் அது தேசிகர் வீதியாகத்தானிருக்கும்.
இது காரைதீவின் மூன்று பிரிவுகளை ஊடறுத்துச்செல்லும் சுமார் இரண்டு கிலோமீற்றர் தூர வீதியாகும்.
இவ்வீதி புனரமைக்கப்பட வேண்டும் என கடந்த பல வருடங்களாக பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டங்களில் பேசப்பட்டுவந்தும் இன்னும் அது கைகூடாமலிருப்பது கண்டு அவ்வீதியில் வசிப்போர் மற்றும் பயணிகள் பலத்தவிசனத்தைத் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான வாகன சாரதிகள் பயணிகள் இப்பாதையை தவிர்க்கின்ற அதேவேளை அவ்வீதியில் வாழும் மக்கள் தவிர்க்க முடியாதவர்களாகவுள்ளனர்.
இது தொடர்பில் காரைதீவு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோரிடம் கேட்டபோது இவ்வீதி கட்டாயம் திருத்தப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
ஜ திட்டத்திற்குள் இவ்வீதி உள்வாங்கப்பட்டதாகக்கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். இல்லாவிடில் வேறேதாவது திட்டத்திற்குள் உள்வாங்கி புனரமைக்கப்படவேண்டும் என்றனர்.