ஜனவரி மாத ராசிபலன்கள்

*❤ஜனவரி மாத ராசிபலன்கள் !!❤*

#மேஷம் :

♥️உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எண்ணிய எண்ணங்களை செயல்படுத்துவதில் பல தடைகளை கடந்து முடிப்பீர்கள். தொழில் சார்ந்த முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கூட்டாளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நேரிடலாம். தொழில் சம்பந்தமாக உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்படும் விரயங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

#வழிபாடு :

நரசிம்மரை வழிபட முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் நீங்கி ஜெயம் உண்டாகும்.

<><><><><><><><><><><><><><>

#ரிஷபம் :

♥️தொழில் வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான நிலை காணப்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியும், அலைச்சல்களும் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும் உதவிகளால் கடன் பிரச்சனைகள் குறையும். குலதெய்வ வழிபாடு மனதிற்கு தெளிவை அளிக்கும். எடுத்த காரியத்தை எடுத்த மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பூர்வீகச் சொத்துகளில் சில பிரச்சனைகள் உருவாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். சுய தொழில் புரிபவர்களுக்கு அரசு அதிகாரிகளால் சில இடையூறுகள் தோன்றும்.

#வழிபாடு :

புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபட குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.

<><><><><><><><><><><><><><>

#மிதுனம் :

♥️மனதில் நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நடைபெறும். குடும்பத்தில் எதிர்பார்த்த தனவரவு காலதாமதமாக கிடைக்கும். புத்திரர்களின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தொழில் சார்ந்த நிலுவைத் தொகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புண்ணியத் திருத்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவுகளிடம் அனுசரித்துச் செல்வதால் ஆதரவுகள் கிடைக்கும். மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் பழகவும். ஆன்மீகம் சம்பந்தமான பணிகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

#வழிபாடு :

♥️காவல் தெய்வங்களை வழிபட ஆரோக்கிய குறைபாடுகள் அகலும்.

<><><><><><><><><><><><><><>

#கடகம்

♥️ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும். வாகன பயணங்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் மனதிற்கு புது நம்பிக்கையை அளிக்கும். தொழிலில் செய்யும் சிறு மாற்றங்களால் இலாபம் உண்டாகும். தந்தையின் ஆதரவால் அனுகூலமான சூழல் அமையும். எதிர்பாராத தனவரவால் கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

#வழிபாடு :

ஆஞ்சநேயரை வணங்கி வர முயற்சியில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும்.

<><><><><><><><><><><><><><>

#சிம்மம்

♥️ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்

எளிதில் முடியும் என எதிர்பார்க்கும் காரியங்கள் காலதாமதமாகும். மனதில் பலவிதமான குழப்பங்கள் தோன்றும். தொழில் சம்பந்தமான முடிவுகளை நிதானத்துடன் யோசித்து செயல்படுத்தவும். வாகன பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்த்தல் நல்லது. பணிபுரியும் இடங்களில் எதிர்பாலின மக்களிடம் சற்று கவனத்துடன் செயல்படவும். எதிர்பார்த்த தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் குறையும். வழக்கு விவகாரங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். அந்நியர்களிடம் சற்று கவனமாக பழகவும். தொழில் சார்ந்த முயற்சிகளில் ஆதரவு கிடைக்கும்.

#வழிபாடு :

சண்முகனை வழிபட எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

<><><><><><><><><><><><><><>

#கன்னி

♥️ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்

செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். வீரத்துடன் பல செயல்களில் ஈடுபட்டு நற்பெயர் பெறுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத இறை தரிசனத்தால் மனம் மகிழ்வீர்கள். உடல் நலத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான சூழல்கள் உண்டாகும். பெரியோர்களிடம் பகைமை பாராமல் நட்புடன் பழகவும். பொருட்களை கையாளும்போது சற்று கவனத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் எண்ணிய பலன் உண்டாகும்.

#வழிபாடு :

அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும்.

<><><><><><><><><><><><><>

#துலாம்

♥️ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்

எண்ணங்களில் ஏற்படும் சில தடுமாற்றங்களால் சரியான முடிவை எடுக்க காலதாமதமாகும். கல்வி பயிலும் மாணவர்கள் சற்று விழிப்புணர்வுடன் கல்வி பயில வேண்டும். செய்யும் செயலுக்கேற்ற வெகுமதி கிடைக்க காலதாமதமாகும். தந்தை, மகன் உறவுகளில் சில மனக்கசப்புகள் தோன்றும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் அமையும். பொன், பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவால் பணியில் உள்ள இடர்பாடுகளை களைவீர்கள். மனைவி வகை உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் உறவினர்களால் சில கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிர்பாராத செயல்பாடுகளால் திடீர் தனவரவு உண்டாகும்.

#வழிபாடு :

♥️பைரவர் வழிபாடு தொழிலில் உள்ள இன்னல்கள் மற்றும் தடைகளை நீக்கி மகிழ்ச்சியை உண்டாக்கும்.

<><><><><><><><><><><><><><

#விருச்சகம்

♥️ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்

சம வயது எதிர்பாலின மக்களின் உதவியால் மகிழ்ச்சி அடைவீர்கள். தந்தையிடம் அனுசரித்துச் செல்லுதல் நன்மையைத் தரும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் எதிர்பார்த்த சூழல் காலதாமதமாக அமையும். திருமண முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் கைக்கூடும். வாகன பராமரிப்பு செலவுகள் நேரிடலாம். வாகன பயணங்களில் கவனத்துடன் செல்லவும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கவனக்குறைவால் அவச்சொற்களுக்கு ஆளாக நேரிடலாம். பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பேச்சுத்திறமையால் தனலாபம் கிடைக்கும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன் உண்டாகும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

#வழிபாடு :

♥️நவகிரகத்தில் உள்ள சனிதேவரை வழிபட நன்மை உண்டாகும்.

<><><><><><><><><><><><><>

#தனுசு

♥️ ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத பேச்சுகளை தவிர்த்து அமைதி போக்கை கடைபிடிக்கவும். அந்நியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளால் எண்ணிய இலாபம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் அமையும். வாரிசுகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணி சம்பந்தமாக உயர் அதிகாரிகளை சந்திக்கும் போது விவேகத்துடன் செயல்படவும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பெரியோர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்வதால் கீர்த்தி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். உயர் பதவிகள் கிடைப்பதற்கான அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.

#வழிபாடு :

♥️மகான்களை தரிசித்து ஆசீர்வாதம் பெறுவதால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

<><><><><><><><><><><><><><

#மகரம்

♥️ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்

புனித யாத்திரைக்குச் செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல் – வாங்கலில் சற்று கவனம் வேண்டும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயங்கள் உண்டாகும். தந்தையிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனப் பயணங்களால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் சுமூகமான நிலை உண்டாகும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைக்கூடும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். கலைஞர்களுக்கு தனது திறமையை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் உண்டாகும். நீண்ட நாள் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும்.

#வழிபாடு :

அதிகாலை எழுந்து சூரியனை வழிபட்டு பின்பு காரியங்களில் ஈடுபட காரியசித்தி உண்டாகும்.

<><><><><><><><><><><><><><

#கும்பம்

♥️ ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்

புதிய மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும். நீர் வழி தொழில்களால் இலாபம் அதிகரிக்கும். கல்வியில் மாணவர்களின் திறமைகள் வெளிப்படும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தந்தையின் தொழிலில் தேவையான ஆதரவுகள் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். பூர்வீக சொத்துக்களால் தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணிய கடன் உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவால் சுபச் செய்திகள் உண்டாகும்.

#வழிபாடு :

செவ்வாய்க்கிழமையில் தேவியுடன் உள்ள சண்முகனை வழிபட குடும்பம் மற்றும் தந்தை உறவில் உள்ள பிரச்சனைகள் தீரும்.

<><><><><><><><><><><><><><><

#மீனம்

♥️ ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்

தந்தையின் உடல் நலத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உயர் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் முயற்சியுடன் செயல்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் வீட்டில் சுபவிரயம் உண்டாகும். திருமணத்திற்கான வரன்கள் கைக்கூடும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். நண்பர்களுடன் இன்பச் சுற்றுலாக்களுக்கு சென்று வர வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். சுரங்க பணியாளர்கள் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். மனைகளின் மூலம் தனலாபம் உண்டாகும். புதிய பங்குதாரர்களால் தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும்.

#வழிபாடு :

தட்சிணாமூர்த்தியை வழிபட தன வரவில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *