காரைதீவு பற்றிய ஒர் அறிமுகம்

எமது ஊரை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்
இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கைத்தீவில்
9 மாவட்டங்களும் 25 மாகாணங்களும் அடங்கலான 65610 பரப்பளவு கொண்ட ஒரு நாடாகும்.
கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டம்( திகாமடுல்லை தேர்தல் மாவட்டம்) பொத்துவில் தேர்தல் தொகுதியில் பழம்பெரும் கிராமமான எமது ஊரானது காரைதீவு என்று வர்ணிக்கப்படுகிறது.
எமது கிராமத்திற்கு தனியான பிரதேச செயலகமும் தனியான பிரதேச சபையும் ஒருங்கிணைந்து காணப்படுகிறது.
காரைதீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்டு 17 கிராம சேவகர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது அவையாவன காரைதீவு 1,2,3,4,5,6,7,8,9,10,11,12 வரையும் ,மாளிகைக்காடு கிழக்கு, மேற்கு ,மத்தி மற்றும் மாவடிப்பள்ளி கிழக்கு மேற்கு என கிராம சேவையாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 5665 இதில் 9563 ஆண்களும் 9563 பெண்களும் அடங்கலாக மொத்த சனத்தொகை 19132 அத்துடன் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை 12526 (2018ம் ஆண்டு வரை).
இங்கு வசிப்பவர்கள் தமது மொழியாக தமிழ் மொழியை பின்பற்றுகின்றனர்.
இங்கு தமிழர்கள் முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர் இவர்கள் இந்து மதம் ,கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களை சார்ந்தவர்களாக காணப்படுகின்றன. இங்கு பல இந்து ஆலயங்களும் தேவாலயங்களும் பள்ளிவாசல்களும் காணப்படுகின்றன.
அத்துடன் ஆரம்பப் பாடசாலை தொடக்கம் உயர்தர கல்வி கற்கும் பாடசாலைகள் வரை சுமார் பத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் இங்கு காணப்படுகின்றன. பல விளையாட்டு கழகங்களும் சமூக அமைப்புகளும் இந்த கிராமத்தை அழகுபடுத்துகின்றன.
இந்த கிராமம் 9-10 சதுரக கி மீட்டர் பரப்பளவில் 4 கிமீ நீளமான கடல் எல்லைக்கு கிழக்கு மற்றும் மேற்கில் நெல் நிலங்கள் உள்ளன. தெற்கு பகுதியில் நிந்தவூர் என்றொரு கிராமமும்யுள்ளது. இவ்விரு கிராமத்திற்கும் மத்தியில் சிறிய நீரோடை ஒன்று ஊடறுத்துச் செல்கிறது இது வயலில் இருந்து கடலுக்கு நீரையும் கடலிலிருந்து வயலுக்கு தண்ணீரை பாய்ச்சுவதற்கு உதவி புரிகிறது.வடக்கு பகுதியில் நகரம் ஒன்று காணப்படுகிறது சுமார் 4 கிலோ மீட்டருக்கு அப்பால் கல்முனை என்ற ஒரு மிகப்பெரிய வணிக நகரம் காணப்படுகிறது.
அத்துடன் எமது கிராமத்திற்கு இடை நடுவில் ஒரு சிறிய நன்னீர் நீரோடை ஒன்று ஊடாக செல்லுகிறது இது கடலுடன் இணைக்கப்பட்டுள்ளது இந்த நீரோடை எமது கிராமத்திற்கு செழிப்பையும் மிக அழகையும், எமது கிணறுகளில் நீர் மட்டங்களை சமச்சீராக வைத்துக்கொள்வதற்கு உதவி புரிகிறது.
கிழக்கில் இந்த கிராமத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், ஸ்ரீலங்கா முழுவதிலும் உள்ள தமிழ் மக்களின் நீண்டகால தமிழ் மற்றும் இந்து பாரம்பரிய மரபுகளை புத்துயிர் அளிப்பதாகக் கருதப்பட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தாரின் பிறப்பிடமாக இது உள்ளது. அத்துடன் கற்புக்கரசி கண்ணகி அம்மன் ஆலயம் இங்கு உள்ளது இந்த ஆலயத்தில் திருப்பலி பூசை நடைபெறுகிறது அதாவது ஆகம முறைப்படி அமைந்த கோயிலும் இங்குயுள்ளது மரபுவழி வாய் கட்டி பூசை செய்யும் கோயில்லும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. அத்துடன் இந்தியாவில் பிறந்து உலகெங்கும் பல சித்துக்களை புரிந்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்கள் சமாதியடைந்த ஊரும் இது, சுவாமி நடராஜானந்தா உன் பிறந்த ஊரும் இது.
தொடர்ச்சியான இலங்கையில் உள்நாட்டு யுத்தம், இந்த கிராமத்தின் குடிமக்கள்ளை மோசமாக பாதித்துள்ளது, இதன் விளைவாக பலர் காணாமல் போனோர், சிலர் கொல்லப்பட்டனர் விதவைகளின் முன்னுரிமை மற்றும் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது.
இந்த கிராமமும் 2004 ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டது., இதன் விளைவாக கிராமத்தில் 50% க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகள் மற்றும் தங்களது உடைமைகளை இழந்தனர். 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறப்பு ஏற்பட்டது. பெரும்பாலான வேளாண் மற்றும் மீன்பிடி தொடர்புடைய குடும்பங்கள் அவற்றின் தொழில்களுடன் தொடர தேவையான எல்லா உபகரணங்களையும் இழந்துவிட்டன.
எமது ஊரை பொறுத்தமட்டில் பல புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்களை பெற்றெடுத்த பெருமை சேரும்.
இங்கு வாழ்ந்தவர்கள் பலர் மேற்படிப்பு மற்றும் உள்நாட்டு யுத்தம் சுனாமி அனர்த்தங்களால் ஆகிய காரணங்களால் இலங்கையில் மற்ற பிரதேசங்களிலும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர் உதாரணமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அரபு நாடுகளில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *