12வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்
விளையாட்டில் ஜென்டில்மேன்(gentleman sport)விளையாட்டு என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட்.
12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இணைந்து நடத்துகிறது.
30 ஏப்ரல் தொடங்குகிறது ஜூலை 14-ந்தேதி வரை இந்தத்தொடர் நடக்கிறது.
இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
வழமைக்கு மாறாக இம்முறை ரவுண்டு ராபின் முறையில் இத்தொடர் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் கருத்துப்படி இம்முறை இந்த உலகக் கிண்ணத்தினை வெல்வதற்கு நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு அதிக சந்தர்ப்பம் காணப்படுவதாகத் கருத்து கணிப்பு மூலம் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல்இதுவரை காலமும் உலகக்கிண்ணத்தை வெ
ல்லாத மற்றைய அணிகளும் பெரும் சவாலாக அமையும் என்றும் கருதப்படுகிறது
அத்துடன் கிரிக்கெட் ஜாம்பவானான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரர் கிறிஸ் கெய்லின் இது கடைசியான உலகக்கிண்ணம் என்றும் அவர் தனது பங்களிப்பினை தனது அணிக்கான மிகச்சிறப்பாக செய்வார் என்றும் கருதப்படுகின்றது.
இங்கிலாந்து தனது சொந்த மண்ணில் விளையாடுவது அவர்களுக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் இங்கிலாந்து அணி வழமைக்கு மாறாக மிகப் பலம் பொருந்திய அணியாகவும் காணப்படுகின்றது ஐசிசி தரவரிசையில் முதலாம் இடத்தை பெற்ற அணியும் இங்கிலாந்து அணி தான்.
இந்தப்போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் லண்டனில் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றினார்கள்.