தாயகச் செய்திகள்

மீனாட்சி அம்மன் ஆலய (நிந்தவூர் )மடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா.

மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் புதிய மடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.
வரலாற்று பழமைவாய்ந்த நிந்தவூர் மாட்டுப்பளை ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய புதிய மடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று (22) ஆலய தலைவர் கே.கமலநாதன் தலமையில் இடம்பெற்றது.
ஆலய வளாகத்தில் காலை 09 மணிக்கு இவ் அடிக்கல் நாட்டுவிழா இடம்பெற்றது.
இன் நிகழ்வில் சிவாச்சாரியார் சண்முக மகேஸ்வர குருக்கள் ,கல்முனை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் சாமித்தம்பி ராஜேந்திரன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் , காரைதீவு இந்து சமய விருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply