ஒரு பாடசாலை அதிபரின் கடமை என்ன என்பது பற்றிய ஒரு விளக்கம்
ஒரு பாடசாலை அதிபரின் கடமை என்ன என்பது பற்றிய ஒரு விளக்கம்
அதிபரின் கடமைக்கூறுகள்
“அதிபரின் வினைத்திறனான முகாமைத்துவம் (Management of School Principal)
ஒரு பாடசாலை திறம்பட இயங்குவதில் அதிபரின் முகாமைத்துவ வகிபாகம் என்பது மிகவூம் முக்கியமான ஒன்றாகும். முகாமைத்துவம் என்பது ஒரு நிறுவனத்தையூம் அதன் ஆளணியினரையூம் நிர்வகிப்பது அல்லது மேற்பார்வை செய்வது மாத்திரமன்று.
அந்நிறுவனங்களுக்குத் தேவையான பொருத்தமான ஆளணியையூம் பௌதிக உள்ளகக் கட்ட மைப்பையூம் பேணுவதன் மூலம் ஒழுங்கான மேற்பார்வை கண்காணிப்பு என்பனவற்றுடன் ஊழியர்களின் தனிப்பட்ட நலன்களைப் பாதுகாத்து அவர்களைத் திருப்திப் படுத்துவதன் மூலம் அந்த நிறுவனத்தின் உச்ச வெளியீட்டை அதிகரிப்பதுதான் முகாமைத்துவம் ஆகும்.
வரையறுக்கப்பட்ட வளங்களை (மனித, பௌதீக) கொண்டு ஒரு நிறுவனம் எவ்வாறு தனது குறிக்கோளை அடைந்து கொள்ள முடியூம் என எடுத்துக் கூறும் கலைதான் முகாமைத்துவம்” என ஈ.எல்.பிரெச் கூறியூள்ளார்.
பொதுவாக ஒரு முகாமைத்துவம் பின்வரும் நான்கு மூலகங்களைக் கொண்டிருக்க வேண்டும். திட்டமிடல்இ ஒழுங்கமைப்புஇ தலைமைத்துவம், கட்டுப்படுத்தல் என்பனவாகும். இவ்வாறு கோட்பாட்டு ரீதியாக பாடசாலைகளில் முகாமைத்துவத்தை நிர்வகிக்கின்ற போது அப்பாடசாலைகளின் பெயர் உயர் மட்டத்தை அடைவதை நாம் அவதானிக்க முடியூம்.
முகாமை என்பது ஒரு தலைமை அதிகாரி மேற்கொள்ளும் நடைமுறை உத்திகளை மட்டுமன்றி பலரது கூட்டுச் செயல்களையூம் குறித்து நிற்பதாகும். நிர்வாகத்தில் முறையான அதிகாரங்களும், பொறுப்புக்களும் அதன் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டாலும் அவை நிர்வாக நலன் கருதி பல மட்டங்களில் பலருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுவதனால், அவற்றைப் பெறும் ஒவ்வொரு அதிகாரியூம் தமக்கு கீழ் உள்ளவர்களைக் கட்டுப்படுத்திக் கடமைகளைப் புரியவைக்கின்றனர். எனவே மற்றவர்களின் உழைப்பின் மூலம் ஆட்சியியலில் குறிக்கோள்களையூம், செயற்பாடுகளையூம் செம்மையாக முற்றுப் பெற வைக்கும் சிறப்புச் செயலே முகாமையாகும்.
முகாமை, தமக்கு கீழ் உள்ளவர்களை நல்வழிப்படுத்தி அவர்களிடம் இருந்து கடமைகளைச் செய்விக்கும்; திறத்தை இது குறிப்பதனாலும், அதிகாரமில்லாத பொறுப்புக்கள் இருக்க முடியாது. ஏனெனில் முகாமைக்கு உயிரும்இ அடித்தளமும் அதிகாரமேயாகும். இவ் அதிகாரம் மேல்நிலையில் உள்ளோர் தம் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் குறித்துப் பொருத்தமான முடிவூகளையேடுத்து அம்முடிவூகளைச் சரியான வழிகளில் முறையாகக் கீழ் நிலையிலுள்ளவர்களுக்கு அறிவித்து அவர்கள் அம்முடிவூகளை செயல்படுத்தும் படி பணி;க்கின்றது.
பாடசாலையின் முகாமையாளர் என்னும் ஒருவர் அல்லது ஒரு குழு தாம் தலைமை ஏற்கும் நிறுவன அமைப்பு எந்த அளவைப் பெற்றிருந்தாலும் அதன் துறைகள் மற்றும் அதன் பல்வேறு பிரிவூகள், கிளைகள் மூலம் கடமையாற்றியாக வேண்டும். இவ்வகையில் முகாமையின் மிக முக்கியமான பாரிய கடமைகளாக பின்வருவனவற்றைக் கூறிக் கொள்ளலாம்.
தலைமைத்துவம்
கொள்கை வகுத்தல்
முடிவூ செய்தல்
பணி இணைப்பு
மேற்பார்வை செய்தல் என்பனவாகும்
ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகள், அவரின் நடிபங்கு என்பவற்றை பல்வேறு அறிஞர்களும் முகாமைத்துவக் கற்கை ஊடாக வெளிப்படுத்தியூள்ளனர். அவ்வாறான கோட்பாடுகள் என்ன கூறுகின்றன. அக்கோட்பாட்டிற்கு இசைவாக நமது பாடசாலை நடைபெறுகின்றதா? பாடசாலையின் முகாமையாளர் அதனைச் சரிவர செய்கின்றாரா? என நாம் படம் போட்டுப் பார்க்கின்ற போது பாடசாலையின் முகாமைத்துவ நிருவாக அமுல்படுத்தலில் பல காரணங்கள் தடையாக அமைவதை நாம் அவதானிக்க முடியூம். அவற்றில் சிலவற்றை நாம் தொட்டுச் செல்கின்ற போது அடையாளப்படுத்த வேண்டிய விடயங்களாக சிலவற்றை நாம் நோக்க முடியூம்.
தலைவர் என்ற வகையில் பாடசாலை அதிபரிடம் காணப்பட வேண்டிய முக்கிய பண்புகள் மாணவர்களாயினும் சரி ஏனையவர்களாயினும் சரி ஒருவர் சிறந்த தலைவராக மாறுவதற்கு அதற்கே உரிய பண்புகளை அவர் தன்னகத்தே கொண்டிருப்பது அவசியமாகும்.
அந்தவகையில் ஒரு தலைவரிடம் காணப்பட வேண்டிய மிக முக்கியமான பண்புகளை பின்வருமாறு பட்டியற்படுத்தலாம்:
உண்மைத் தன்மை நம்பகத்தன்மை
தூரநோக்கான சிந்தனை
தொடர்பாடற் திறன்
ஏனையவர்களுடன் சுமுகமான உறவூ
செல்வாக்குச் செலுத்தும் தன்மை
நெகிழ்வூத் தன்மை
குழுவாகச் சேர்ந்து வேலை செய்யூம் பண்பு
பயிற்சியளித்தலும் விருத்தி செய்தலும்
தீர்மானிக்கும் ஆற்றல்
திட்டமிடல்
கலந்துரையாடல்
வாண்மை விருத்தியில்லாத ஆனால் அனுபவம் வாய்ந்த அதிபர்கள் இதேபோன்று அனுபமற்ற வாண்மை விருத்தியூள்ள அதிபர்கள் நடை முறைப்படுத்தும் செயற்பாடுகளில் மேற்கூறியவற்றில் ஒன்று இருந்து மற்றொன்று இல்லாத போது அவர் நிருவாகத்தில் சில சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியூள்ளது. இதேபோன்று அனுபவமும் வாண்மை விருத்தியூம் உள்ள ஒரு அதிபருக்கு அரசியல் தலையீடுகள் நிருவாகத்தை அமுல்படுத்துவதற்கு தடைகளாக உள்ளதையூம் நாம் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
இவ்வாறு பல தலையீடுகளை ஒரு முகாமையாளர் எதிர்நோக்குகின்ற போது ஒரு சிறந்த முகாமையாளர் என்ற வகையில் அதிபர் இவ் விடயங்களுக்கு அப்பால் தனது போக்கை மாற்றி தனது நிறுவனம் வளர வேண்டுமென்ற கொள்கை அதிபரிடம் இருக்குமானால் அவரால் முடியாதென்ற விடயம் உடைத்தெறிந்து அப்பாடசாலை கட்டியெழுப்பப்படும்.
அதிபர் BOSS என்ற நிலையிலிருந்து விடுபட்டு Executive Officer என்ற நிலைக்கு வரவேண்டும். ஏனென்றால் ஒரு பாடசாலை குடும்பத்தில் அனுபவம் வாய்ந்த வயது முதிர்ந்த ஆசிரியர்களும் வாண்மை விருத்தியூள்ள இளம் ஆசிரியர்களும் இருப்பர். இவர்களின் ஆற்றலையூம் அனுப வத்தினையூம் அதிபர் பெற முயற்சிக்க வேண்டும். இந்த அடிப்படையில் அதிபர் ஒரு நிறைவேற்று நிருவாகி என்ற வகையில் சில கோட்பாட்டை மையமாக வைத்து முகாமைத்துவ த்தை மேற்கொள்கின்ற போது பிரச்சினைகளைத் தவிர்க்க முடியூம்.
இதனடிப்படையில் மினிஸ்பேக்கின் நடிபங்குக் கோட்பாடு ரீதியாக பாட சாலை நிருவாகத்தை அமுல் படுத்துகின்ற போது சிறப்பான முகாமைத்துவ நிருவாகத்தை நடைமுறைப்படுத்த முடியூம். மினிஸ்பேக் பிரதான மூன்று நடிபாகங்களுhடாக பத்து நடி பங்குகளை முன்வைத்துள்ளார்.
ஆளிடைத் தொடர்பு நடிபங்குஇ தகவல் தொடர்பு நடிபங்கு, தீர்மானமெடுத்தல் நடிபங்கு. பாடசாலையில் அதிபரின் தொழிற்பாடுகளை பிரதான மாக மூன்று தலைப்பின் கீழ் இனங்காணலாம். தொழிற்பாடுகளை மேலும் விரிவாக அவர் எடுத்துக் கூறியூள்ளார்.
1. ஆளிடைத் தொடர்பு நடிபங்கு
தலைமைத்தவம்
தலைவர்
இணைப்பாளர்
2. தகவல் தொடர்பு நடிபங்கு
கண்காணிப்பாளர்
தகவல் பரப்புனர்
பேச்சாளர்
3. தீர்மானம் எடுத்தல் நடிபங்கு
முயற்சியாண்மையாளர்
பிரச்சினையைக் கையாள்பவர்
வள ஒதுக்கீட்டாளர்
பேசித் தீர்ப்பவர்
பாடசாலை திறம்பட இயங்குவதில் அதிபரின் முகாமைத்துவ வகிபாகம் என்பது அடித்தளதான விடயமாக அமைந்துள்ளது. இவ்வாறு நாம் மேற்கூறப்பட்ட பத்து நடிபங்குகளையூம் தெட்டத் தௌpவாக நோக்கு கின்ற போது ஆளிடைத் தொடர்பு நடிபாகத்தின் கீழ் மாணவர் ஆசிரியர், பெற்றௌர்,சமூகத் தொடர்பு போன்ற ஒவ்வொன்றிற்கும் இடையிலான இடை வினைத் தொடர்பு உற்றவராக அதிபர் காணப்படுவார். இணைப்பாளர் என்ற வகையில் நிறுவனத்தின் வளர்ச்சியூடன் தொடர்புபட்டவர்.
பொதுவாக வெளியார்இ தொடர்பு நிறுவன இலக்கு அடைய நிறுவன முகாமையாளர்இ பணிப்பாளர் வாடிக்கையாளரிடமிருந்து சிறந்த தொடர்புகளை பாடசாலை அதிபர், ஆசிரியர், சிற்றூழியர் பெற்றௌர், மாணவர்இ உயர் நிறுவனத்தின் தலைவர் ஆகியோரிடம் ஆக்கபூர்வமான தொடர்புகளை ஏற்படுத்தி பாட சாலையின் வளர்ச்சிக்காக அவர் செயற்பட வேண்டும். இங்கு தனித்தனியாக நாம் நோக்குகின்றபோது ஆளிடைத் தொடர்பின் கீழ் மூன்று முக்கிய நடிபங்கு உள்ளது. தலைமைத்தோற்ற நடிபாங்குஇ இது தலைமைத்துவத்தை பிரதிபலிக் கும் செயற்பாடு. நிறுவனத்தை இல குவாக முகாமை செய்ய இது உதவி புரியூம். உதாரணமாக நிறுவனத்திற்கு உள்ளும் வெளியூம் நடைபெறும் விழாக்கள்இ விருந்துபசாரங்கள்இ விளையாட்டுஇ கலைவிழா ஆகியவற் றில் பங்கு பற்றி தலைமைத்துவத்தை வகித்தல். இது சமூகத்தில் அதிபர் என்ற ஸ்தானத்தை நிலை நிறுத்த உதவூம்.
அடுத்து தலைவர் நடிபங்கு, நிறுவனம் தொடர்பான பொறுப்பாளர், பொறுப்புக் கூறுபவர் அதிபராவார். பணியாளர்களை வேலைக்கு அமர்த்துதல், பயிற்சி அளித்தல், ஊக்குவித்தல், தனியாள் தேவைகளை நிறைவூ செய்தல், நிறுவனத் தேவை என்பவற்றை இணைத்தல், ஆசிரியர்கள் அதிபரிடம் ஆழமான தலைமைத் துவத்தை எதிர்பார்க்கின்றார்கள். எனவே ஆளணியினரை பொருத்தமான பதவியில் அமர்த்துதல், ஆசிரியர்களை வெளிப்படையாகவூம், மறைமுக மாகவூம் பயிற்சி அளிக்கச் செய்தல் போன்ற செயற்பாடுகளை இந் நடிபங்கு ஊடாக அதிபர் நிறைவேற்ற முடியூம்.
இதேபோன்று மூன்றாவது விடயமான இணைப்பாளர் என்ற விடயத்தினூடாக நிறுவனத்தின் உள்ளும் வெளியூம் பல்வேறு தரப்பினர் அதிபரைத் தொடர்பு கொள்வர். அதிபர், ஆசிரியர், மாணவர், அதிகாரிகள், பணியாளர்கள், பெற்றௌர்கள், நலன் விரும்பிகள் போன்றௌர்களுடன் அதிபரின் தொடர்புஇ அவர்களிடம் இணைப்பாளராகத் தொழிற்பட்டு இதன் மூலம் தனிப்பட்ட தகவல் அமைப்பொன்றை அதிபர் உருவாக்க வேண்டும்.
அடுத்து பிரதான வகிபாகமான தகவல் தொடர்பு வகிபாகத்தின் கீழ் வரும் மூன்று நடிபங்குகளை நோக்குகின்ற போது நிறுவனத்தின் பிரதான மூளையாக முகாமையாளர் தொழிற்படுகின்றார். பாடசாலை அதிபரும் அவ்வாறே. நிறுவனம் தொடர்பாக தகவல் பெறுவது, அதிபரின் பொறுப்பாகும். சிறந்த முகாமையாளர் நிறுவனத்தின் கடமை நேரங்களில் ஒரு பகுதி நேரத்தை தகவல் திரட்டலிலே செலவழிக்கின்றார். கட்டமைப்பு, மாணவர் சேவை, பாட சாலைத் தேவை, கல்விக் கொள்கை, நிதிப்பிரமாணம் போன்ற பல விடயங்களில் இவர் தகவல்களை சேகரிக்க வேண்டியதாக இருக்கின்றார்.
தகவல் தொடர்பு வகிபாகத்தின் கீழ் முதலாவது விடயமாக கண்கா ணிப்பாளர் என்ற வகிபாகம் முக்கியம் பெறுகின்றது. முகாமையாளர் தனது தகவல் சூழலை இடைவிடாது கண்காணிக்க வேண்டும். சாதனங்கள் மூலமாகவூம், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மூலமாகவூம் முகாமை யாளர் தரவூகளைப் பெற வேண்டும். சிறப்பான தொடர்பாடல் மூலம் உண்மையான தகவல்களைப் பெறுவது அதிபரின் பொறுப்பாகும்.
இதில் அடுத்து வருவது, தகவல் பரப்புவோர் உரியவர்களுக்கு உரிய நேரத்தில்இ உரிய தரவூகள் செல்ல வழி செய்ய வேண்டும். இது முகாமையா ளரின் பணி. இதற்காக தகவல் பரப்பு ஒன்றை கொண்டிருப்பது முகாமையாளரின் பொறுப்பாகும். உதாரணமாக உரிய நேரத்தில் பயிற்சிக்குச் செல்ல ஆசிரியர்களுக்குத் தகவல் கொடுத்தல்.
தகவல் தொடர்பு வகிபாகத்தில் மூன்றாவதாக பேச்சாளர் எனும் வகிபாகம் முக்கியம் பெறுகின்றது. நிறுவன முன்னேற்றம், உரிய விடயங்கள் என்பனவற்றை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் முகாமையாளர், பேச்சாளர் நடிபங்கை ஆற்றுகின்றார். அதிபரின் முகாமைத்துவக் கடமையில் இவை முக்கியமானவை.
மின்ஸ்பெக்கின் பிரதான நடிபங்குக ளில் ஒன்றான தீர்மானம் எடுத்தலின் கீழ் நான்கு முக்கிய விடயங்கள் குறி ப்பிடப்படுகின்றன. தகவல் நடிபங்கை தீர்மானம் செய்ய வழிவகுக்கும் முக்கிய விடயமாக இது காணப்படுகி ன்றது. இதில் முதலாவதாக முயற்சி யாண்மையாளர் வகிபாகம் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தொழில்படல், கட்டமைப்பை உருவாக்குதல், முறைகள்இ தொழிநுட்பம் போன்றவற்றை பிரயோகித்தல், மேற்பார்வை ஆலோசனை போன்ற விடயங்கள் இதில் அடங்கும்.
இதன் கீழ் இரண்டாவது நடிபங்கான பிரச்சினையைக் கையாள்தல் என்ற விடயம் சு+ழ்நிலை அழுத்தங்களைக் கவனத்தில் கொண்டு நிலைமாறும் சூழ்நிலைக்கு ஏற்ப சூழ்நிலை அணுகு முறைகளைக் கைக்கொள்தல் முகாமையாளரின் ஆளுமையாகும். குறிப்பிட்ட நேரப்பகுதியை உயர் அழுத்த பிரச்சினைகளுக்குச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பிட்ட பிரச்சினைகள் உள்வாரியாகவூம் வெளிவாரியாகவூம் காணப்படும். இதனை நிதானமாகக் கையாண்டு பொருத்தமான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பவராக அதிபர் காணப்பட வேண்டும்.
அடுத்த நடிபாங்கான வள ஒதுக்கீட்டாளர் என்ற விடயம் மனித, பௌதீக, நேர வள ஒதுக்கீடுகளை உச்ச அளவில் பயன்படுத்துதல், இதனைப் பிரயோகிக்கும் போது முன்னுரிமையைக் கருத்தில் கொள்ளல் மேலும் வள விடயத்தைத் தடுத்தல் போன்றன ஒரு சிறந்த அதிபரின் முகாமைத்துவ செயற்பாடாகும்.
இறுதியாக பேச்சுவார்த்தை நடத்துபவர் என்ற நடிபாங்கு எல்லா செயற்பாடுகளுக்கும் கலந்துரையாடல் மூலம் தேவைகள் பொறுப்புப் பற்றி கலந்துரையாடி நிறுவனத்திற்கு உள்ளும் வெளியூம் முகாமையாளர் பணியை வினைத்திறனுடன் ஆற்ற வேண்டும்.
கற்றல்இ கற்பித்தல் விடயங்களை சரிவரச் செய்துஇ ஒரு பாடசாலை அதன் நற் பெயரை உச்ச நிலையில் அடையச் செய்ய இவ்வாறான கோட்பாடுகளை அதிபர்கள் கற்று நடைமுறைப்படுத்த விளைகின்ற போது அதன் விளைதிறன் உச்சமாக அமையூம் என்று குறிப்பிடலாம். எனவே ஒரு பாடசாலையின் அதிபரானவர் மேற்குறிப்பிட்ட வகையில் தமது முகாமைத்துவ உத்திகளை தன்வசம் வைத்திருக்கின்றபோது புதிதாக பாடசாலைக்கு கொண்டு வருகின்ற வேலைத்திட்டங்களையூம் அபிவிருத்தி நடவடிக்கைகளையூம் செவ்வனே முன்னெடுத்துச் செல்ல முடியூம்.
பொதுவாக இன்று பாடசாலை மட்டங்களை பொருத்தளவில் அங்கு இடம்பெறுகின்ற அபிவிருத்தி மற்றும் கற்றல் கற்பித்தல் என்பன அதிபரினுடைய பொறுப்பின் படியே இடம்பெறுகின்றது. அந்த வகையில் பாடசாலைக்கு கொண்டு வருகின்ற புதிய மாற்றங்கள்இ திட்டங்கள் என்பன இடைநடுவே தடைப்படுவதற்கு பல்வேறு விடயங்கள் காரணமாகின்றன. அதாவது அதிபர் மீது எதிர்ப்பினை கொண்டவர்கள் இடையூ+றுகளை விளைவிக்கலாம். குறிப்பிட்ட அந்த பாடசாலiயை சூழ்ந்துள்ள சமூகங்களின் அழுத்தங்கள் முக்கியமான விடயங்களாக உள்ளன. பாடசாலையிலே காணப்படுகின்ற அபிவிருத்தி குழு, ஆசிரியர் சங்கம் போன்ற அமைப்புக்களும் தடைகளை ஏற்படுத்துகின்றன.
முகாமையின் அடிப்படைக் கடமைகளில் மிக முக்கியமானது முடிவூ செய்தலாகும்;. ஜனநாயக ஆட்சியியலில் மக்களுக்கு சேவை செய்தலே முதன்மையாக கொள்ளப்படுவதனால் ஓர் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும்இ பின்பற்ற வேண்டிய நடைமுறை அம்சங்கள் குறித்தும் திறமையான முகாமையானது சரியானதும்இ பொறுப்பு மிக்கதுமான முடிவூகளை மேற்கொண்டு செயற்பட வேண்டும். பாடசாலையின் சகல விதமான சூழ்நிலைகளிலும் அதிபரின் சரியான வகையில் முடிவெடுத்தல் முக்கியமான விடயமாகும்.
குறிப்பிட்ட சூழ்நிலையில் கொடுக்கப்பட்ட அனேக மாற்று வழிகளிலிருந்து சிறப்பானதை அறுதியிட்டுத் தேர்ந்தெடுப்பதே முடிவூ செய்தல் எனலாம். முடிவூ எடுக்கும் விருப்பம் திறமை, எடுத்த முடிவிற்குப் பொறுப்பேற்பது போன்ற இயல்புகளைக் கொண்டு அதிபர்களால்; எடுக்கப்படும் முடிவூகள் யாவூம் அவர்களது சொந்த அறிவூத் திறனின் அடிப்படையிலேயே செயற்படுத்தப்படல் வேண்டும். தலைமையதிகாரி எடுக்கும் நிர்வாகம் பற்றிய முடிவூகள் உண்மையிலேயே நிர்வாக உறுப்பினர்கள் பலருக்கு திருப்தியளிக்காவிட்டாலும், அவரது முடிவூ நிலைப்பாடுகளை பின்பற்றும் கொள்கையினை நிறைவேற்றி வைப்பதற்குத் துணைபுரியக்கூடியனவாக இருக்க வேண்டும்.
நிர்வாகத் தலைமையில் தோன்றியிருக்கும் பிரச்சினைகளை வகைப்படுத்திஇ அவற்றினை முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒன்றன் பின் ஒன்றாக அணுகி முடிவிற்கு வருதல். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தலைமை தனது சக்தி, நேரம் என்பவற்றை எந்தளவிற்கு செலவழிப்பது என்பதை முடிவூ செய்தல். பிரச்சினைகளைச் சந்திப்பதன் மூலம் அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டால் அவற்றில் எவ் அபிப்பிராயத்தைத் கவனத்தில் எடுப்பது என்பதை முடிவூ செய்தல் என்பது அதிபரின் சிறப்பான நிர்வாகத்தை எடுத்துக்காட்டும். ஒரு மேற்பார்வையாளர் என்ற வகையில் அதிபரானவர் தம் பொறுப்பின் கீழ் நடைபெறும் கடமைகள் பற்றிய முழுமையான நுட்ப அறிவை பெற்று மேற்பார்வை செய்தல் வேண்டும். கடமைகள் அல்லது கொள்கைகளின் நடைமுறைகளை மேற்பார்வை செய்தல் மேற்பார்வையாளர் தம் அலுவலர்களிடம் நேருக்கு நேர் தொடர்பு கொண்டு அவர்களிடம் செயலூக்கத்தை தோற்றுவித்தல் என்பவைகளாகும்.
அதிபரினுடைய வினைத்திறனான தலைமைத்துவம் என்பது மிகவூம் முக்கியமான ஒன்றாக அமைகின்றது. அதாவது எந்த சூழ்நிலையிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது அதனை முகமைத்துவ உத்திகளை கொண்டு தீர்க்க கூடியவராக காணப்படல் வேண்டும். பாடசாலை திறம்பட இயங்குவதில் அதிபரின் முகாமைத்துவ வகிபாகம் என்பது அடித்தளதான விடயமாக அமைந்துள்ளது.
Visvalingam Prashanthan
Dept of Education & Child Care
Faculty of Arts & Culture
Eastern University, Government of Sri Lanka – GoSL”
நன்றி