ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பதவி #Archie schiller
ஆஸ்திரேலியாவில்_ஒரு_நடுத்தர குடும்பத்தில்_பிறந்து_தற்போது_7 #வயதாகும்_சிறுவன் தான் ஆர்ச்சி ஷில்லர். இவனது இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதால் பல முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவன் உயிர்பிழைக்க வைக்கப்பட்டுள்ளான். நாள்பட நாள்பட ஷில்லரின் இதய செயல்பாடு மிகவும் மோசமான கட்டத்தை எட்டியது. வெளித்தோற்றத்திலும் அவனது செயல்பாட்டிலும் எந்தவித மாற்றமும் தெரியவில்லை என்றாலும், அவனது இதயத்தில் இருக்கும் கோளாறு மட்டும் இன்னும் நீடித்து வருகிறது. இதனால், அவனது உயிர் எப்போது வேண்டுமானாலும் விண்ணை நோக்கி சென்று விடும் அபாயம் நிலவுகிறது.
முன்னதாக, உனக்கு பிடித்த விளையாட்டு எது என்று? மருத்துவமனையில் ஷில்லரிடம் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு ‘கிரிக்கெட்’ என்று பதில் சொன்ன அவன், எதிர்காலத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக வர வேண்டும் என்பதே தனது இலட்சியம் என்றும் அழுத்தமாக கூறினான். இதையடுத்து, இன்றைய ‘பாக்ஸிங் டே’ போட்டியின் போது ஷில்லருக்கு ஆஸ்திரேலிய அணியின் கௌரவ துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கான தொப்பி ஷில்லருக்கு முறைப்படி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது ஆஸ்திரேலிய அணி கேப்டன் பெயின் தலைமையில் வீரர்கள் அனைவரும் மைதானத்தில் குழுமியிருந்தனர்.
டாஸ் போடப்படும் போது ஆஸ்திரேலிய கேப்டனுடன் மைதானத்திற்குள் வருகை தந்த ஷில்லரைக் கண்டதும் இந்திய அணி கேப்டன் கோலி உட்பட இந்திய வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதன் பிறகு, மைதானத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும் போதும் சரி, இந்திய வீரர்களுடன் பேசும் போதும் சரி ஷில்லரின் குறும்பைக் கண்டு ரசிக்காதவர்கள் எவருமே இல்லை எனலாம். அந்தளவிற்கு அந்த 7 வயது பிஞ்சின் முகத்தில் அத்தனை சந்தோஷம் படர்ந்திருந்தது.