எம்மைப்பற்றி.

பிரித்தானியா மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் எம் மக்களின் அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பார்கள் மற்றும் காரைதீவு ஒன்றியம் பிரித்தானியா சார்பாக நடைபெறுகின்ற நிகழ்வுகளை உங்கள் கண்முன்னே நிறுத்தும் ஒரு சிறு முயற்சி ஆகும்.

இவ் இணையத்தளமானது எம்மவர்களின் நிகழ்வுகள்,தகவல்கள் ,செய்திகள் மற்றும் இது போன்ற ஏனைய விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

இலங்கையின் முதல் தமிழ்ப் பேராசிரியரான முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நாமத்தால் விளங்கும் காரேறு மூதூராம் காரைதீவுப் பதிதனில் உதித்தவர்கள் நாம் என்பதற்கிணங்க எம்மூரின் செழுமை,சிறப்புக்களையும் எமது கிராமத்தின் கலைகளை,பாரம்பரியங்களையும் தற்போதைய நவீன உலகத்தில் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இணங்க எம் உறவுகளுடன் தகவல்களை பரிமாற்றம் செய்ய எம்மவர்களால் Viber Grop மூலம் தோற்றம் பெற்றது “காரைதீவு ஒன்றியம் பிரித்தானியா “ (Karaitivu Association United Kingdom) இன்று எம்மவர்களின் இதயங்களில் எவ்வித ஒளிவுமறைவும் இன்றி இணையத்தளம் www.karaitivu.co.uk ஊடாக கால் பதிக்கிறோம்.

எம்மவர்களால் முன்னெடுக்கப்படும் இச்சேவையினை எதிர்காலத்தில் மிக சிறப்புற முன்னெடுத்துச் செல்ல அனைவரினதும் ஆசியினையும், பேராதரவினையும் வேண்டி நிற்கின்றோம்.

மேலும் விமர்சனங்களையும் கருத்துக்களையும் உங்களிடம் வேண்டி நிற்கின்றோம் ஏனெனில் விமர்சனங்கள் மற்றும் பின்னூட்டம் மூலமே எமது செயற்பாட்டினை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியும்.

“பிரித்தானியாவில் ஓர் காரைதீவு”

காரைதீவு ஒன்றியம் பிரித்தானியா

Karaititivu Association United Kingdom
நன்றி
இணையக்குழு.