சுவாமி நடராஜானந்தா ஜீயின் 115வது ஜனனதினம் இன்று(29.11.2018)

.கி.மிசன் துறவி சேவையின் சின்னம் சுவாமி நடராஜானந்தா ஜீயின் 115வது ஜனனதினம் இன்று(29.11.2018) ஆகும்.
காரைதீவு பெற்றெடுத்த மற்றுமொரு இ.கி.மிசன் சுவாமி நடராஜானந்தா ஜீ 29.11.1903 ஆம் ஆண்டில் பூவுலகில் அவதரித்தார்.
அவரது 115வது  ஜனனதினவிழாவை காரைதீவில் இன்று(29) காலை காரைதீவு இந்துசமயவிருத்திச்சங்கம் அதன் தலைவர் எஸ்.மணிமாறன் தலைமையில் நடாத்தவுள்ளது.
காரைதீவு பிரதேசசெயலக முன்றலில் சுவாமி நடராஜானந்தா நூற்றாண்டுவிழாச்சபையால் 2004இல் நிறுவப்பட்ட சுவாமி நடராஜானந்தரின் திருவுருவச்சிலையடியில் இவ் ஜனனதினவிழா நடைபெறும்.
திவுருவச்சிலைக்கு மலர்மாலையணிவித்தல் வேதபாராயணம் பாடுதல் சிறப்புச்சொற்பொழிவு என்பன இடம்பெறும் என செயலாளர் கு.ஜெயராஜி தெரிவித்தார்.
இ.கி.மிசனின் 26 பாடசாலைகளின் முகாமையாளராக இருந்து அவர் ஆற்றிய பணிகள் இன்றும் போற்றுதற்குரியவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *