இன்றைய நாள் எப்படி…!

*🚩🔯 ராசி பலன்கள்🔯🚩*

🕉🕉🕉⚜⚜⚜🔯🔯🔯

*🔔 14 /1/ 2019 🔔*

🔯மேஷம் ராசி

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் அடங்கும். பூமி விருத்திக்கான பணியில் இருந்த இடர்பாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அசுவினி : வாய்ப்புகள் உண்டாகும்.

பரணி : எதிர்ப்புகள் அடங்கும்.

கிருத்திகை : சிந்தனைகள் மேலோங்கும்.

🔯ரிஷபம் ராசி

வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். உயர் கல்விக்கான முயற்சிகள் பலன்களை தரும். கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். எடுத்துச்செல்லும் உடைமைகளின் மீது கவனம் வேண்டும். பழைய நினைவுகளால் மனவருத்தம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : ஆதரவான நாள்.

ரோகிணி : இலாபம் கிடைக்கும்.

மிருகசீரிடம் : மனவருத்தம் ஏற்படும்.

🔯மிதுனம் ராசி

கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். அரசு ஆதாயம் உண்டாகும். இறை வழிபாட்டில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்துகொள்ளவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : கலை அறிவு மேம்படும்.

திருவாதிரை : நிதானத்துடன் நடந்துகொள்ளவும்.

புனர்பூசம் : இலாபம் அடைவீர்கள்.

🔯கடகம் ராசி

திருமண முயற்சிகளில் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழிலில் பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அக்கம் – பக்கம் வீட்டார்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

பூசம் : அறிமுகம் உண்டாகும்.

ஆயில்யம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

🔯சிம்மம் ராசி

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். எதிர்பாராத தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதுவிதமான பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய வேலை தேடுபவருக்கு சுபச் செய்திகள் வந்தடையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மகம் : உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.

பூரம் : மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் : அனுகூலம் ஏற்படும்.

🔯கன்னி ராசி

தாய்வழி உறவுகளிடம் நிதானம் வேண்டும். பொருட்சேர்க்கை உண்டாகும். பயணங்களில் கவனம் வேண்டும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். பெரியோர்களிடம் சற்று அமைதியுடன் செயல்படவும். கடன் தொல்லைகளால் மனவருத்தங்கள் நேரிடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திரம் : நிதானம் வேண்டும்.

அஸ்தம் : கவனம் தேவை.

சித்திரை : அமைதி வேண்டும்.

🔯துலாம் ராசி

கணவன் – மனைவி இடையே அனுசரித்துச் செல்லவும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். சுபச் செய்திகளால் சுப விரயம் உண்டாகும். வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பிறருக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.

சுவாதி : சுபவிரயம் உண்டாகும்.

விசாகம் : அனுகூலமான நாள்.

🔯விருச்சகம் ராசி

சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனம் தெளிவு பெறும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

அனுஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கேட்டை : ஆசைகள் நிறைவேறும்.

🔯தனுசு ராசி

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார உதவிகள் நண்பர்களின் மூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். மனைகளின் மூலம் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : தேவைகள் பூர்த்தியாகும்.

பூராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

உத்திராடம் : இலாபம் உண்டாகும்.

🔯மகரம் ராசி

எண்ணிய செயலை முடிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். வாகனங்களில் நிதானம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : நிதானம் வேண்டும்.

திருவோணம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.

🔯கும்பம் ராசி

குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தாமதமான செயல்களை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்த பணவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சாதுர்யமான பேச்சுகளால் அனைவரையும் ஈர்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அவிட்டம் : தெளிவு பிறக்கும்.

சதயம் : கவனம் வேண்டும்.

பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.

🔯மீனம் ராசி

நினைத்த காரியம் ஈடேறும். தொழில் சம்பந்தமான முயற்சியில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். செய்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் எண்ணமறிந்து செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

பூரட்டாதி : காரியம் ஈடேறும்.

உத்திரட்டாதி : சாதகமான நாள்.

ரேவதி : திருப்தியான சூழல் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *