இன்றைய நாள் எப்படி…!

*🚩🔯 ராசி பலன்கள்🔯🚩*

🕉🕉🕉⚜⚜⚜🔯🔯🔯

*🔔 11/ 1/ 2019 🔔*

🔯மேஷம் ராசி

நிர்வாகத்தில் நீங்கள் செய்யும் மாற்றங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். பணியில் பிறரின் தலையீடுகளால் மனக்கசப்புகள் நேரிடலாம். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அசுவினி : அனுகூலமான நாள்.

பரணி : அலைச்சல்கள் உண்டாகும்.

கிருத்திகை : நிதானம் வேண்டும்.

🔯ரிஷபம் ராசி

உடைமைகளில் கவனம் வேண்டும். கணவன் – மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த பணிகள் காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரோகிணி : இலாபம் கிடைக்கும்.

மிருகசீரிடம் : எண்ணங்கள் ஈடேறும்.

🔯மிதுனம் ராசி

தொழில் கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவு

பிரச்சனைகளில் தலையிடுவது அவப்பெயரை ஏற்படுத்தலாம். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : அனுசரித்துச் செல்லவும்.

திருவாதிரை : பணிச்சுமை அதிகரிக்கும்.

புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.

🔯கடகம் ராசி

குடும்ப விவகாரங்களில் பிறரின் தலையீடுகளை தவிர்க்கவும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தத்தன்மை நேரிடலாம். கூட்டாளிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். பெரியோர்களை அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சுப விரயங்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : தலையீடுகளை தவிர்க்கவும்.

பூசம் : நிதானம் வேண்டும்.

ஆயில்யம் : அனுசரித்துச் செல்லவும்.

🔯சிம்மம் ராசி

தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். நெருக்கமானவர்களிடம் மனக்கசப்புகள் நேரிடலாம். நீண்ட நாட்களாக தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : சுபிட்சமான நாள்.

பூரம் : சிந்தனைகள் மேம்படும்.

உத்திரம் : வெற்றி உண்டாகும்.

🔯கன்னி ராசி

தொழிலில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். பங்காளிகளிடம் நிதானம் வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும். பெரியோர்களிடம் நற்பெயர்கள் உண்டாகும். நீர்நிலை சம்பந்தமான துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.

அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.

சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

🔯துலாம் ராசி

மனை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சுமூகமான முடிவுகள் கிடைக்கும். புதியவர்களின் அறிமுகத்தால் இலாபம் உண்டாகும். வாக்குவன்மையால் புகழப்படுவீர்கள். புத்திரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : இலாபம் உண்டாகும்.

சுவாதி : பாராட்டப்படுவீர்கள்.

விசாகம் : வீண் பேச்சுகளை தவிர்க்கவும்.

🔯விருச்சகம் ராசி

தனவரவுகள் கிடைக்கும். அந்நியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். குறுகிய தூர பயணங்களால் அனுகூலம் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். மனைகளில் புதிய வீடுகளை கட்டுவதற்கான முயற்சிகள் கைக்கூடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : தனவரவுகள் கிடைக்கும்.

அனுஷம் : நிதானம் வேண்டும்.

கேட்டை : முயற்சிகள் கைக்கூடும்.

🔯தனுசு ராசி

உடல்நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். வேலை வாய்ப்புகளில் இருந்து வந்த தடைகள் அகலும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். செய்யும் வேலைகளில் பதற்றமின்றி கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மூலம் : இன்னல்கள் நீங்கும்.

பூராடம் : தடைகள் அகலும்.

உத்திராடம் : கவனத்துடன் செயல்படவும்.

🔯மகரம் ராசி

விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். இணையதளம் சம்பந்தமான பணியில் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

உத்திராடம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.

திருவோணம் : தனலாபம் கிடைக்கும்.

அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.

🔯கும்பம் ராசி

தொழில் சம்பந்தமான முயற்சிகளால் மேன்மையான சூழல் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகள் எண்ணிய பலன்களை அளிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : மேன்மையான சூழல் அமையும்.

சதயம் : சிந்தனைகள் மேலோங்கும்.

பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.

🔯மீனம் ராசி

சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உயர் அதிகாரிகளிடம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

ரேவதி : கவனம் தேவை.

🕉🕉🕉⚜⚜⚜🔯🔯🔯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *