இன்றைய நாள் எப்படி…!

*🚩🔯 ராசி பலன்கள் 🔯🚩*

*🔔10/ 01 2019 🔔*

🔯மேஷம் ராசி

உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான நிலை உருவாகும். புதிய வாகனங்களை வாங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அசுவினி : பிரச்சனைகள் குறையும்.

பரணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.

🔯ரிஷபம் ராசி

உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை குறையும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நினைத்த காரியத்தை எண்ணியப்படி செய்து முடிப்பீர்கள். சகோதரிகளின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

கிருத்திகை : செயல்வேகம் அதிகரிக்கும்.

ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.

மிருகசீரிடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

🔯மிதுனம் ராசி

குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். கொடுக்கல் – வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லவும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிடம் : பேச்சில் நிதானம் வேண்டும்.

திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.

புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

🔯கடகம் ராசி

கூட்டாளிகளிடம் சற்று நிதானத்துடன் பழகவும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்துச் செயல்படவும். சந்திராஷ்டம தினம் என்பதால் புதிய பொருட்களை வாங்கும்போது கவனம் தேவை. வெளியூர் பயணங்களின்போது தேவையான கோப்புகளை எடுத்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.

ஆயில்யம் : உடைமைகளில் கவனம் வேண்டும்.

🔯சிம்மம் ராசி

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : திறமைகள் வெளிப்படும்.

பூரம் : திருப்திகரமான நாள்.

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

🔯கன்னி ராசி

குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : சுபிட்சமான நாள்.

அஸ்தம் : முயற்சிகள் கைக்கூடும்.

சித்திரை : இன்னல்கள் குறையும்.

🔯துலாம் ராசி

புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனை மற்றும் வீடு வாங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் மகிழ்ச்சியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : சிந்தனைகள் மேலோங்கும்.

சுவாதி : உதவிகள் கிடைக்கும்.

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

🔯விருச்சகம் ராசி

திட்டமிட்டு செயல்படுவதால் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். சொத்து தொடர்பான வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். ஆன்மீகம் தொடர்பான பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : போட்டிகள் குறையும்.

அனுஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.

கேட்டை : ஆதரவு கிடைக்கும்.

🔯தனுசு ராசி

மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் தொடர்பான காரியங்களில் கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பயணங்களில் அலைச்சல்களும், அனுகூலமும் உண்டாகும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். மனதிற்கு விருப்பமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மூலம் : ஆசைகள் நிறைவேறும்.

பூராடம் : கவனம் வேண்டும்.

உத்திராடம் : அனுகூலமான நாள்.

🔯மகரம் ராசி

நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் மேன்மை உண்டாகும். வெளியூர் பயணங்களால் மாற்றமான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

திருவோணம் : மாற்றமான நாள்.

அவிட்டம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

🔯கும்பம் ராசி

தொழில் தொடர்பான முயற்சிகளின் மூலம் அலைச்சலும், இலாபமும் உண்டாகும். புதிய தொழிலை நிறுவுவதற்கான முதலீடுகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். குடும்ப நபர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.

சதயம் : புரிதல் உண்டாகும்.

பூரட்டாதி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

🔯மீனம் ராசி

உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.

ரேவதி : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

🕉🕉🕉⚜⚜⚜🔯🔯🔯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *