இன்றைய நாள் எப்படி…!

*🚩🔯 ராசி பலன்கள் 🔯🚩*

🕉🕉🕉⚜⚜⚜🔯🔯🔯

*🔔 9/ 1/ 2019 🔔*

🔯மேஷம் ராசி

மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். வழக்குகளில் நிதானத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாகும். தொழில் சார்ந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : சிந்தனைகள் மேலோங்கும்.

பரணி : வாய்ப்புகள் அமையும்.

கிருத்திகை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

🔯ரிஷபம் ராசி

நண்பர்களுடன் சேர்ந்து வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

ரோகிணி : முன்னேற்றமான நாள்.

மிருகசீரிடம் : எண்ணங்கள் ஈடேறும்.

🔯மிதுனம் ராசி

உடன்பிறப்புகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சாதகமான சூழல் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

திருவாதிரை : சாதகமான நாள்.

புனர்பூசம் : அன்பு அதிகரிக்கும்.

🔯கடகம் ராசி

தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்க காலதாமதமாகும். பெரியவர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்படுவது நன்மை அளிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : நிதானத்துடன் செயல்படவும்.

பூசம் : பொறுமை வேண்டும்.

ஆயில்யம் : அனுசரித்துச் செல்லவும்.

🔯சிம்மம் ராசி

உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செய்யும் செயல்களால் மேன்மை அடைவீர்கள். தடைபட்டு வந்த சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவு பிறக்கும். பெரியோர்களின் வழிகாட்டுதலும், ஆலோசனைகளும் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : ஆதரவான நாள்.

பூரம் : மேன்மை உண்டாகும்.

உத்திரம் : தெளிவு பிறக்கும்.

🔯கன்னி ராசி

உத்தியோகஸ்தரர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும். மனதில் இருந்து வந்த விருப்பங்கள் யாவும் நிறைவேறும். கூட்டாளிகளின் மூலம் இலாபகரமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.

அஸ்தம் : ஆசைகள் நிறைவேறும்.

சித்திரை : இலாபம் உண்டாகும்.

🔯துலாம் ராசி

குடும்ப நபர்களின் ஆதரவால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மேன்மையான சூழல் உண்டாகும். பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : சுபிட்சமான நாள்.

சுவாதி : குழப்பங்கள் நீங்கும்.

விசாகம் : எண்ணங்கள் மேலோங்கும்.

🔯விருச்சகம் ராசி

மனதில் இருக்கும் கருத்துகளை வெளிப்படுத்தும்போது சற்று நிதானத்துடன் செயல்படவும். சொந்த ஊர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மகான்களின் தரிசனம் மகிழ்ச்சியை அளிக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : அமைதி வேண்டும்.

அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும்

கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

🔯தனுசு ராசி

புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளிநாட்டு பயணங்களில் சாதகமான சூழல் உண்டாகும். வாசனை திரவியங்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : கவனம் வேண்டும்.

பூராடம் : இலாபம் கிடைக்கும்.

உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.

🔯மகரம் ராசி

தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் உருவாகும். உயர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். சில செயல்களை திட்டமிட்டு செயல்படுத்தி எண்ணிய வெற்றி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : ஆதரவான நாள்.

திருவோணம் : உயர்வான நாள்.

அவிட்டம் : வெற்றி உண்டாகும்.

🔯கும்பம் ராசி

தொழில் தொடர்பான முயற்சிகளின் மூலம் அலைச்சலும், இலாபமும் உண்டாகும். புதிய தொழிலை நிறுவுவதற்கான முதலீடுகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். குடும்ப நபர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.

சதயம் : புரிதல் உண்டாகும்.

பூரட்டாதி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

🔯மீனம் ராசி

பொருட்சேர்க்கை உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணியில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.

உத்திரட்டாதி : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

ரேவதி : ஆதரவு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *