இன்றைய நாள் எப்படி…!

*🚩🔯 ராசி பலன்கள் 🔯🚩*

*🔔 8/1 /2019 🔔*

🔯மேஷம் ராசி

வியாபாரம் சம்பந்தமான சில நுணுக்கங்களை கற்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். நீர் பாசனம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய மனைகள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அசுவினி : புதிய நுணுக்கங்களை கற்பீர்கள்.

பரணி : கலகலப்பான நாள்.

கிருத்திகை : சிந்தனைகள் மேலோங்கும்.

🔯ரிஷபம் ராசி

துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழிலில் மேன்மையான சூழல் மற்றும் வாய்ப்புகள் அமையும். வாக்குவன்மையால் பொருளாதார நிலை உயரும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

கிருத்திகை : ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள்.

ரோகிணி : வெற்றி உண்டாகும்.

மிருகசீரிடம் : வாய்ப்புகள் அமையும்.

🔯மிதுனம் ராசி

செய்யும் காரியங்களை கவனத்துடன் செய்யவும். எதிர்பார்த்த காரியம் ஈடேற காலதாமதமாகும். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். பிறருக்கு உதவும்போது சிந்தித்துச் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிடம் : செயல்களில் காலதாமதமாகும்.

திருவாதிரை : பேச்சில் கவனம் வேண்டும்.

புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.

🔯கடகம் ராசி

குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்து இலாபம் அடைவீர்கள். வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

பூசம் : அறிமுகம் உண்டாகும்.

ஆயில்யம் : இலாபம் அடைவீர்கள்.

🔯சிம்மம் ராசி

விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழல் அமையும். செய்யும் பணியில் பிறரின் இடர்பாடுகளால் காலதாமதம் ஏற்படும். உத்தியோகஸ்தரர்கள் உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் பழகவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூரம் : காலதாமதம் ஏற்படும்.

உத்திரம் : நிதானம் வேண்டும்.

🔯கன்னி ராசி

வாரிசுகளால் சுப விரயம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் அமையும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி நட்பு வட்டம் விரிவடையும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : சுப விரயம் உண்டாகும்.

அஸ்தம் : அனுகூலமான நாள்.

சித்திரை : சேமிப்பு அதிகரிக்கும்.

🔯துலாம் ராசி

கால்நடைகளால் இலாபம் உண்டாகும். விவாதங்களினால் கீர்த்தி அடைவீர்கள். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். மனைகளால் இலாபம் அதிகரிக்கும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து சுபச் செய்திகள் வரும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

சித்திரை : இலாபம் அதிகரிக்கும்.

சுவாதி : மேன்மை உண்டாகும்.

விசாகம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

🔯விருச்சகம் ராசி

தந்தையிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். மேலதிகாரிகளால் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : நிதானம் வேண்டும்.

அனுஷம் : அமைதி வேண்டும்.

கேட்டை : அனுகூலமான நாள்.

🔯தனுசு ராசி

அந்நியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். நிர்வாகத்தில் உள்ள குறைகளை களைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

பூராடம் : சிந்தனைகள் மேலோங்கும்.

உத்திராடம் : குறைகளை களைவீர்கள்.

🔯மகரம் ராசி

கூட்டாளிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். மனைவியின் உதவியால் தொழிலில் சாதகமான நிலை உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கு தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். கலை சார்ந்த அறிவுகளால் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

திருவோணம் : சாதகமான நிலை அமையும்.

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

🔯கும்பம் ராசி

செய்யும் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு கிடைக்கும். மனைவியிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதுவித உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.

சதயம் : அனுசரித்துச் செல்லவும்.

பூரட்டாதி : புதிய எண்ணங்கள் தோன்றும்.

🔯மீனம் ராசி

பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் உங்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.

ரேவதி : புத்திக்கூர்மை வெளிப்படும்.

🕉🕉🕉⚜⚜⚜🔯🔯🔯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *